குவாங்ஷூ: 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி (நவ. 12-27) சீனாவின் குவாங்ஷூ நகரில் நாளை கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 609 வீரர், வீராங்கனைகள் அடங்கிய அணி களமிறங்குகிறது. போட்டியை நடத்தும் சீனா 1,454 பேர் அடங்கிய மெகா அணியை தேர்வு செய்துள்ளது. ஆசிய போட்டியில் கிரிக்கெட் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது.
சர்வதேச போட்டிகள் காரணமாக இந்திய அணி ஆசிய போட்டியில் பங்கேற்கவில்லை. மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். துவக்க நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆசிய வி¬ ளயாட்டு போட்டிகளை டென் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. போட்டி பாதுகாப்புகளுக்காக சீன அரசு ரூ.120 கோடி செலவழித்துள்ளது. ஆசிய போட்டி விளையாட்டு கிராமத்தில் இன்று மதியம் இந்திய தேசிய கொடி ஏற்றப்படுகிறது. நாளை நடைபெறும் தொடக்க விழாவின் போது, காமன்வெல்த் ஹீரோ துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் தலைமையில் இந்திய அணி வகுத்து செல்கிறது.

Comments