சபரிமலை நடை நாளை திறப்பு நவ., 5 ல் ஸ்ரீசித்திராட்டு விழா

சபரிமலை: ஸ்ரீசித்திராட்டு வைபவம், சபரிமலையில் தீபாவளி தினமான நவ.,5 ல் நடக்கிறது. இதற்காக, நாளை மாலை 5.30 மணிக்கு ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்படும். அன்று,வேறு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் அதிகாலை 4 மணிக்கு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உதயாஸ்தமன மற்றும் படி பூஜைகளுடன் ஸ்ரீசித்திராட்டு வைபவ சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.கோவில் நடை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். மண்டல கால பூஜைகளுக்காக நவ., 16 ல் மாலை 5.30 க்கு, கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். அப்போது, சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சசி நம்பூதிரியும், மாளிகைப் புரத்தம்மன் கோவில் புதிய மேல்சாந்தியாக தனஞ்ஜெயன் நம்பூதிரியும் பொறுப்பேற்பார்.

Comments