சொகுசு கப்பலில் தீ 4,500 பேர் தவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கார்னிவல் ஸ்பிலெண்டர் என்ற சொகுசு கப்பல் 3,299 பயணிகள் மற்றும் 1,167 ஊழியர்களுடன் பசிபிக் கடலில் சென்று கொண்டிருந்தது. மெக்சிகோ அருகே கடந்த திங்கள் கிழமை சென்று கொண்டிருந்தபோது, கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பற்றியது.

கப்பலில் இருந்த ஊழியர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இன்ஜின் தீப்பற்றி செயல் இழந்ததால், கப்பல் நடுக்கடலில் தத்தளித்தது. மின்சாரமும் தடைபட்டது. ஏ.சி இயந்திரமும் செயல்படாததால், பயணிகள் சிரமப்பட்டனர். சூடான உணவும் கிடைக்கவில்லை. தண்ணீர் பாட்டில், கூல்டிரிங்ஸ் மட்டுமே பயணிகளுக்கு சப்ளை செய்யப்பட்டது. கப்பலை கலிபோர்னியாவின் சான் டிகோ துறைமுகத்துக்கு  கொண்டு வர இழுவை படகுகள் அனுப்பப்பட்டுள்ளன.

Comments