மேட்டூர் அணை நீர்வரத்து 21,800 கனஅடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணை மேற்பகுதியில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்ததால் நேற்று விநாடிக்கு 14 ஆயிரத்து 845 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து இன்று மாலை விநாடிக்கு 21 ஆயிரத்து 881 கனஅடியாக அதிகரித்தது. பருவமழை காரணமாக நேற்று விநாடிக்கு 8, 750 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து இன்று 15 ஆயிரத்து 222 கனஅடியாக அதிகரித்தது. இன்று கே.ஆர்.எஸ்.ஸில் இருந்து விநாடிக்கு11 ஆயிரத்து 937 கனஅடி உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. பருவமழை காரணமாக அக்டோபர் 30ம் தேதி 60.610 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 70 அடியாக உயர்ந்தது. மூன்று நாளில் நீர்மட்டம் 10 அடியும், நீர் இருப்பு 7.5 டி.எம்.சி.,யும் அதிகரித்துள்ளது.

Comments