கொழும்பு:கொழும்பு - தூத்துக்குடி இடையே, கப்பல் போக்குவரத்தை துவங்குவது என, இந்தியா - இலங்கை நாடுகள் முடிவு செய்துள்ளன.இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, இலங்கையில் நான்கு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று காலை அவர், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேசினார்.
இருதரப்பு உறவு, தமிழர் பிரச்னைக்கான தீர்வு ஆகிய விஷயங்கள் குறித்து, இருவரும் பேச்சு நடத்தியாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.இதையடுத்து, இந்தியா - இலங்கை இடையே அமைக்கப்பட்ட கூட்டு குழு கூட்டத்திலும், அமைச்சர் கிருஷ்ணா கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், கொழும்பு - தூத்துக்குடி இடையேயான கப்பல் போக்குவரத்தை துவங்குவது என, முடிவு செய்யப்பட்டது.
மேலும், சுற்றுலாத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், "தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில், அவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்ற திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.போர் முடிந்த பிறகு, தமிழர்களை மறு குடியமர்த்துவது, கண்ணி வெடிகளை அகற்றுவது போன்ற விஷயங்களில் அரசு கவனம் செலுத்தி வந்தது.தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, தமிழ் தேசிய கூட்டணி கட்சியினருடன், அரசு ஆலோசனை நடத்தியது' என்றார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது:இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, அரசுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளப்படுமென நம்புகிறேன்.தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்தும்படி தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.ஏற்கனவே, பெரும்பாலான தமிழர்கள் மறுகுடி யமர்த்தப்பட்டு விட்டனர். இன்னும் 17 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் பேர் வரை மட்டுமே முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரை வில் குடியமர்த்தப்படுவர். இந்த பிரச்னையை இலங்கை அரசு உணர்வுப்பூர்வமாக அணுகும் என நம்புகிறேன்.இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.

Comments