ஆந்திராவில் மழைக்கு 16 பேர் பலி

விசாகப்பட்டினம் : வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதையடுத்து, ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், கனமழைக்கு 16 பேர் பலியாகியுள்ளனர்.விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளில், மழை வெள்ளத்தால், ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தானிய விளைச்சல் பாதிப்பாகிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.தொடர்ந்து மழை நீடித்து வருவதால், வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக, முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments