மு.க.அழகிரி மகன் திருமண ஏற்பாடுகள் கோலாகலம்: நவ. 14ல் முதல்வர் மதுரை பயணம்

சென்னை: மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு. க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகிறது.

மத்திய அமைச்சர் மு. க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு வரும் 18-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் திருமணம் நடைபெறுகிறது.

இதற்காக தமுக்கம் மைதானத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கிறது. சுமார் 5 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போட்டு மைதானம் முழுதும் குளிரூட்டப்படுகிறது.

திருமணத்தன்று மதுரையில் உள்ள 40 திருமண மண்டபங்களில் விருந்து நடக்கவிருக்கிறது. விமரிசையாக நடக்கும் இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து வரும் திருமண ஏற்பாடுகளை நேரில் பார்வையிடுவதற்காக கருணாநிதியின் மகள் செல்வி இன்று மதுரை சென்றுள்ளார். வரும் 14-ம் தேதி துணை முதல்வர்  ஸ்டாலின் மதுரைக்குச் சென்று திருமண ஏற்பாடுகள் செய்யவிருக்கிறார். பேரனின் திருமணத்தையொட்டி முதல்வர் வரும் 14-ம் தேதி மதுரைக்குச் செல்கிறார்.

Comments