மேட்டூர் : கூடுதல் நீர்வரத்து காரணமாக, ஒரு ஆண்டிற்கு பிறகு நேற்றிரவு, மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.மேட்டூர் அணைக்கு நேற்று 30 ஆயிரத்து 397 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மாலை 38 ஆயிரத்து 382 கன அடியாக அதிகரித்தது. கூடுதல் நீர்வரத்து காரணமாக, நேற்று 97 அடியாக இருந்த நீர்மட்டம், இரவு 100 அடியை எட்டியது. அதை தொடர்ந்து, உபரி நீர் வெளியேற்றும் 16 கண் மதகில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு செப்., 22ல் 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம், ஒரு வாரத்திற்கு பின், செப்., 30ம் தேதி 99 அடியாகக் குறைந்தது.இந்நிலையில், கூடுதல் நீர்வரத்து காரணமாக, ஒரு ஆண்டிற்கு பிறகு இரவு, மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கடந்த 12 நாளில் அணை நீர்மட்டம் 40 அடியும், நீர் இருப்பு 41 டி.எம்.சி.,யும் அதிகரித்தது.
Comments