நாகப்பட்டினம் : தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, துவங்கிய வடகிழக்கு பருவமழை, நேற்று இரவு நாகையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. விளை நிலங்களில் மழை நீர் தேங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடற்கரை ஓரம் நங்கூரமிடப்பட்டிருந்த மூன்று படகுகள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பூலாம்பாடி, அரும்பாவூர் ஓடைகளில் அதிகளவு நீர் வெளியேறி வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டது. கும்பகோணம் த்தில் சோமேஸ்வர சுவாமி கோவிலின் கொலுமண்டபம் இடிந்து தரை மட்டமானது.கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அறநிலையத்துறையினர், இடிந்து விழுந்த பகுதியை பார்வையிட்டு, சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி தென்பெண்ணையாற்றின் குறுக்கே கே.ஆர்.பி., அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டமான 52 அடியில், தற்போது நீர்மட்டம் 50 அடியாக உள்ளது. கன மழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்புள்ளதால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.பொள்ளாச்சியில் ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில், 119.40 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 465 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 181 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.அதிகளவு மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால், அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.
Comments