ரஹ்மானுக்கு இந்திரா விருது

புதுடில்லி : இந்திரா தேசிய விருது வழங்கும் விழா, டில்லியில் நேற்று நடந்தது. 25வது ஆண்டு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற காங்., தலைவர் சோனியா, சிறந்த கல்வி சேவையாற்றி வரும் நாராயண்பூரில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு விருது வழங்கினார். இந்த விருதை, ஆசிரம நிர்வாகி சுவாமி வியாப்தானந்தா பெற்றுக்கொண்டார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து இந்திரா விருதை திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், "தேசிய ஒற்றுமையை பாதுகாக்க பலவழிகள் உண்டு. ஏ.ஆர்.ரஹ்மான், இசை மூலம் இந்த பணியை செய்கிறார். சத்திஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் பின்தங்கிய மக்களிடம் கல்வியறிவை ஊட்டும் பணியை ராமகிருஷ்ணா மிஷன் சிறப்பாக செய்து வருகிறது' என்றார்.

Comments