மதுரை:தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இரு மாதங்களுக்கு முன்பிருந்த விலையைவிட தற்போது ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் மக்களின் வாங்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை என்பதால், கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
'ஆன்-லைன்' வர்த்தகம் காரணமாக, தங்கம் உட்பட அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் மாதந்தோறும் அதிகரிக்கிறது. இதை காரணமாக வைத்து, 'ஆன்-லைன்' வர்த்தகத்தில் இல்லாத பொருட்களின் விலையையும் சத்தமில்லாமல் அதிகரிக்கின்றனர். மதுரையில் கடந்த மாதம் ஒரு லிட்டர் பாமாயில் 46 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது 10 ரூபாய் அதிகரித்துள்ளது. சூரியகாந்தி எண்öண் 58 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கும், தேங்காய் எண்ணெய் 64 ரூபாயில் இருந்து 84 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
எண்ணெய் வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது : உற்பத்தி மற்றும் இறக்குமதி குறைவே இந்த உயர்வுக்கு காரணம். அதேசமயம், 80 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 75 ரூபாயாக குறைந்துள்ளது. நல்லெண்ணெய் 80 ரூபாய், தும்பை நல்லெண்ணெய் 110 ரூபாய் என்பதில் மாற்றமில்லை. வனஸ்பதி 54 ரூபாயில் இருந்து 56 ரூபாய்க்கும், ரைஸ்பிரான் ஆயில் 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என்றார்.
அரிசி விலையும் அதிகரித்துள்ளது. புது ரகத்தின் விலை கிலோவிற்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. சில கடைகளில் கிலோ 36 ரூபாய்க்கு விற்ற கர்நாடகா பொன்னி 37 ரூபாய்க்கும், டீலக்ஸ் பொன்னி 29 ரூபாயில் இருந்து 35 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பருப்பு விலை குறைந்துள்ளது. துவரம் பருப்பு கிலோ 65 ரூபாயில் இருந்து 63 ரூபாயாகவும், கடலை பருப்பு 38 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும், உருட்டு பருப்பு 82 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும் குறைந்துள்ளது. பாசி பருப்பு 80 ரூபாயில் இருந்து 68 ரூபாய்க்கு சரிந்துள்ளது. பாசி பயறு 60 ரூபாயில் இருந்து 65 ரூபாயாக அதிகரித்துள்ளது.
முகூர்த்த நாட்களுக்கு பஞ்சமில்லாத இம்மாதத்தில், காய்கறி விலை சீராக உள்ளது. தொடர் மழையிலும் மதுரைக்கு வரத்து உள்ளதால், விலை உயரவில்லை. ''இந்நிலை தீபாவளிக்கு பிறகும் தொடரும்,'' என்கிறார் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் சங்கத் தலைவர் முருகன். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தபோதும், அதை பற்றி கவலைப்படாமல், தீபாவளியை கொண்டாட மதுரை மக்கள் தயாராகி வருகின்றனர்.

Comments