அகமதாபாத்: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி குஜராத்தை விட்டு வெளியேறி மும்பைக்குப் போய் விட்டார் முன்னாள் குஜராத் அமைச்சரும், சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அமீத் ஷா.
குஜராத் உயர்நீதிமன்றம் அமீத் ஷாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அதை எதிர்த்து இரவோடு இரவாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது.
அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது என்று கூறி விட்டது. அதேசமயம், ஞாயிற்றுக்கிழமை காலை அமீத் ஷா குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும். நவம்பர் 15ம் தேதி வரை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை குஜராத்துக்கு வரக் கூடாது என்று உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று காலை குஜராத்தை விட்டு வெளியேறினார் அமீத் ஷா. அவர் மும்பை போவதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments