புதுடில்லி : ஐ.பி.எல். நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கு தயார் என அமலாக்க பிரிவு முடிவு செய்தது. ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து லலித்மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து லலித் மோடிக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், வெளிநாட்டில் இருக்கும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்தநிலையில் அமலாக்க பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ள லலித்மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Comments