சென்னை :"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கிராமப்புறங்களில் பெற்று வரும் பெரும் வரவேற்பை கண்டு ஒரு சில நாளேடுகளும், ஒரு சில எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தில் ஏதாவது குறை காண முடியாதா என ஏங்கித் தவிக்கின்றன' என, முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:தற்போது கலைஞர் வீட்டு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளிலும், ஒரே நேரத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீடும் 207 சதுரடி பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. வீடு கட்டத் தேவைப்படும் சிமென்ட் மற்றும் இரும்பு கம்பிகளை, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் அரசே வழங்குகிறது.வெளிச்சந்தை விலையை விடக் குறைவாக, ஒரு மூட்டை சிமென்ட் 210 ரூபாய் வீதம் 60 மூட்டை சிமென்ட் வழங்கப்படுகிறது. ஒரு வீட்டுக்கு தேவைப்படும் 155 கிலோ கம்பி, சராசரியாக கிலோ 36 ரூபாய் என்ற விலையில், கலெக்டர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக, வெளிச்சந்தையில் இவற்றின் விலை உயர்ந்தாலும், பயனாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.கலெக்டர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம் பேசி, வெளிச்சந்தை விலையை விட குறைவான விலைக்கு செங்கல் கிடைக்க செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.வரும் ஜனவரி மாதத்துக்குள் மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, ஏழை எளியோர் நிரந்தரமான கான்கிரீட் வீடுகளுக்கு உரிமையாளர்கள் என்ற சமுதாய அந்தஸ்தை பெற்று, பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்வர்.கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கிராமப்புறங்களில் பெற்றுவரும் பெரும் வரவேற்பைக் கண்டு ஒரு சில நாளேடுகளும், ஒரு சில எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தில் ஏதாவது குறை காண முடியாதா என ஏங்கித் தவிக்கின்றன.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Comments