திருச்சி : ""ஏதோ விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்; வயிற்றெரிச்சலில் குறை கூறுகின்றனர்,'' என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருச்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா, வளர்ச்சி திட்டப்பணி துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
இதில், துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:மகளிர் சுயஉதவிக் குழு செயல்பாட்டில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. வங்கிகளிலிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று, தொழில் துவங்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் மகளிர் சுயஉதவிக் குழு துவங்கப்பட்டது. அது கம்பீரமாக அதையும் தாண்டி பெருமையோடு சொல்ல வேண்டுமானால், இன்று மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது.தமிழகத்தில் நான்கு லட்சத்து 74 ஆயிரத்து 874 குழுக்களும், அதில் 73.60 லட்சம் உறுப்பினர்களும் உள்ளனர். கடந்த நான்கரை ஆண்டில், மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 534 குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் ஐந்தாண்டில், சுயஉதவிக் குழுவுக்கு 1,644 கோடி ரூபாய் வங்கிக் கடனாகவும், 76 கோடி ரூபாய் சுழல் நிதியாகவும் வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டில் மட்டும் 7,756 கோடி ரூபாய் வங்கிக் கடனாகவும், 315 கோடி ரூபாய் சுழல் நிதியாகவும் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் மொத்தம் 21 லட்சம் குடிசை வீடுகள் கண்டறியப்பட்டு, அவை கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படுகின்றன. முதலாமாண்டு ஒதுக்கீட்டில் மூன்று லட்சம் வீடுகள் ஜனவரியில் கட்டி முடிக்கப்படும் என, முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்கு முன் அவை கட்டி முடிக்கப்படும்.இத்திட்டத்தைப் பார்த்து, ஏதோ விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக கொச்சைப்படுத்துகின்றனர். இத்திட்ட துவக்க விழா திருச்சியில் தான் நடந்தது. விழாவில், தோழமை கட்சி தவிர கம்யூனிஸ்ட், பா.ம.க., தலைவர்களும் பங்கேற்றனர்.தற்போது முன்னாள் முதல்வர், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் தி.மு.க.,வினருக்கும் வீடு வழங்கப்படுவதாகவும், கட்சியினருக்கு கான்ட்ராக்ட் வேலை வழங்கப்படுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.முன்னாள் முதல்வர் பொறுப்பில்லாமல் பேசுவது தவறு. ஒருவேளை திட்டத்தில் தவறு நடந்திருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால், அதற்கு முழு பொறுப்பேற்று, அதை நிவர்த்தி செய்ய தயார் என தெரிவித்தேன். ஆனால், இதுவரை அதற்கு பதில் சொல்லவில்லை.இந்த ஆட்சிக்கு மக்களிடத்தில் சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது என்ற வயிற்றெரிச்சலில் குறை கூறுகின்றனர்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பயனாளியிடம் சாவி : திருச்சி அருகே, வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒரு வீட்டை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, பயனாளியிடம் வீட்டின் சாவியை வழங்கினார்.வீட்டு உரிமையாளரான கூலித் தொழிலாளி கணேசன், ரத்தினம் தம்பதியருக்கு வீட்டு சாவியை ஸ்டாலின் வழங்கினார். அருகில், கட்டப்பட்டு வரும் டிரைவர் மணியின் வீட்டை பார்வையிட்டார்.

Comments