உலக லெவன் அணியில் சச்சின்

புதுடில்லி: "கிரிக்கென்போ' இணையதளம் தேர்ந்தெடுத்துள்ள உலக லெவன் டெஸ்ட் வீரர்கள் பட்டியில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கிய 11 டெஸ்ட் வீரர்களின் பட்டியலை, நேற்று ஈ.எஸ்.பி.என்., "கிரிக்கென்போ' இணையதளம் வெளியிட்டது. இதில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இடம் பெற்றுள்ளார். இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங்,மெக்ராத், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இந்தியாவின் கபில் தேவ், கவாஸ்கர் ஆகியோருக்கு இடம் கிடைக்க வில்லை. உலக லெவன் அணி: ஜேக் ஹாப்ஸ், லென் ஹட்டன், டான் பிராட்மேன், சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், கில்கிறிஸ்ட், மால்கம் மார்ஷல், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், டெனிஸ் லில்லி.

Comments