பெங்களூரில் இளம்பெண் கொலை : முக்கிய குற்றவாளி கைது

சென்னை : பெங்களூரில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயசெல்வன். இவரது மகள் மலர்விழிக்கும்(25) பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் பாலசுப்ரமணியம் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி பாலசுப்ரமணியன் வேலைக்கு சென்ற போது தனிமையில் இருந்த மலர்விழி மர்மநபரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து பெங்களூர் போலீசார் விசரித்து வந்தனர். இந்நிலையில், சென்னை தி.நகர் மேன்சன் அறையொன்றில் தங்கியிருந்த வாலிபர் விஷம் குடித்த நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அங்கு விரைந்த தி.நகர் உதவி கமிஷனர் மனோகரன் தலைமையிலான போலீசார் மயக்க நிலையில் கிடந்த அவரை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு குணமான நிலையில், போலீசாரைக் கண்டு திடுக்கிட்ட அந்த நபர் என்னை மன்னித்து விடுங்கள், தெரியாமல் கொலை செய்து விட்டேன் என கூறியுள்ளார். அவனிடம் தொடர்ந்து விசாரித்ததில், அவரது பெயர் நவீன் என்பதும், பெங்களூரில் மலர்விழியை இவர் கற்பழித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நவீனை தி.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments