சென்னை: கர்நாடகத்திடமிருந்து நமக்கு வந்து சேர வேண்டிய காவிரி நீரைப் பெற சட்டப்படியாக தொடர்ந்து வாதாடுவோம், நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .
பெங்களூரில் நேற்று நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தற்போதைக்குத் தண்ணீர் தர முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி,
காவிரி நீர்ப் பிரச்சினையை சட்டப்பூர்வமாக சந்திப்போம். நமக்குரிய பங்கு நீரைப் பெறுவதற்கு சட்டரீதியாக தொடர்ந்து வாதாடுவோம், நடவடிக்கை எடுப்போம்.
இருப்பினும் தற்போது எழுப்பப்பட்டுள்ள பிரச்சினை குறித்து மீடியாக்களில்தான் செய்தி வந்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது இரு மாநில உறவுகளைப் பாதிக்கும். தேவையில்லானத கருத்து வேறுபாடுகளுக்கு வித்திடும்.

தற்போதைய சூழ்நிலையில் இந்தப் பிரச்சினையை பிரதமரிடத்தில் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கே பிரச்சினை குறித்துத் தெரியும். காவிரிப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார் முதல்வர்.
Comments