புதுடில்லி : ""இந்திய சமூகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது,'' என, சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.
சத்யநாராயணா திவாரி என்பவர் தனது மனைவி கீதாவை, அவரின் தந்தையிடமிருந்து மாருதி காரை வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தினார். 2000ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, கீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். இதற்கு திவாரியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இவர்களுக்கு அலகாபாத் ஐகோர்ட் ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை, நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: இந்திய சமூகம் தற்போது, நோய்வாய்ப்பட்ட சமூகமாக மாறி வருகிறது. இதற்கு ஆதாரமாக, சுப்ரீம் கோர்ட் உட்பட, நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும், அதிக எண்ணிக்கையில் இத்தகைய வரதட்சணைக் கொலை வழக்குகள் வரத்தொடங்கியுள்ளன. புதிதாக திருமணம் செய்து கொண்டு, ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீடு போகும் இளம்பெண்கள், தனது கணவனாலும், மாமனார் மற்றும் மாமியாரால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.
மேலும், மண்ணெண்ணெய் ஊற்றி, உயிருடன் எரிக்கப்படுகின்றனர் அல்லது, வலுக்கட்டாயமாக தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படுகின்றனர். இந்த நாகரிக சமூதாயத்தில், பெண்கள் பயங்கரமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவுமே கையாளப்படுகின்றனர். பொதுவாக, இத்தகைய கொடூரச் செயலுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால், அரிதிலும், அரிதாகவே, வரதட்சணைக் கொலை வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அத்துடன் திவாரிக்கும் அவரின் தாயாருக்கும் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.

Comments