"எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு...
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது...
இது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது...
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்...'
பகவத்கீதை காட்டும் இந்தப் பாதை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவத் தவிர்த்து அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் பொருந்தும். யார், எப்போது கோபுரத்தின் உச்சிக்குப் போவர், எப்போது அதலபாதாளத்தில் வீழ்வர் என்பது, "அம்மா' மட்டுமே அறிந்த ரகசியம்.
முதல்வர் பதவியை வகித்த ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொன்னையனில் துவங்கி மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் வரை அனைவருமே கட்சியில் பல நேரங்களில் ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்தவர்கள்.கடந்த சில வாரங்களாக மீண்டும் அ.தி.மு.க.,வில் அதிரடி துவங்கியுள்ளது. கட்சியில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி என வரிசையாய் முன்னணியினர் ஆளுங்கட்சிக்கு தாவிக் கொண்டிருந்த நேரத்தில், தொண்டர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது கோவையில் ஜெ., பங்கேற்ற பொதுக்கூட்டம்.பிரமாண்டமான கூட்டத்தை திரட்டி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், ஆளுங்கட்சிக்கு கிலியையும் அளிக்க காரணமாக இருந்த அந்த மாவட்டத்தின் செயலர் செ.ம.வேலுச்சாமியின் பதவி திடீரென பறிக்கப்பட்டு, எம்.ஜி.ஆர்., மன்றச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், வடசென்னையில் 13 ஆண்டுகளாக மாவட்டச் செயலராக சிறப்பாக செயல்பட்ட சேகர்பாபுவும் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணியின் துணைச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வடசென்னை மாவட்ட செயலராக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து ஜெனிபர் சந்திரனும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளராக இருந்த வளர்மதியிடமிருந்தும் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் பதவி பறிப்பு அக்கட்சியில் தொடர்கதையாக இருப்பதால், தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க., என்ற கோபுரத்திற்கு தொண்டர்கள் என்ற பலமான அஸ்திவாரத்தை மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர்., அமைத்து கொடுத்து விட்டார். எத்தனையோ தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்த போதும், அமைச்சர் பதவியை அனுபவித்தவர்கள் தான் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆனால், எந்த பலனையும் எதிர்பார்க்காமல் இன்னமும் அக்கட்சிக்கு தனது உழைப்பை தந்து கொண்டிருக்கும் தொண்டர்கள் ஒருவரும் வெளியேறவில்லை. அதேசமயம், அ.தி.மு.க., உருவாக்கிய தலைவர்கள் வெளியேறும் போது, அவர்களின் உழைப்பு வேறு கட்சிக்கு கூடுதல் பலமாக கிடைக்கிறது. இதனால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த அதிரடி மாற்றத்தை அமைதியாய் ஏற்கும் பக்குவம் கட்சி நிர்வாகிகளிடம் இருப்பது புதுமை. அதே நேரத்தில், கட்சியில் இருந்து வெளியேறுபவர்களோ, அ.தி.மு.க.,வில் சர்வாதிகாரம் நிலவுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:இந்த மாற்றங்களை சர்வாதிகாரம் என்று கூற முடியாது. இதுதான் உண்மையான ஜனநாயகம். கட்சியின் அடிமட்டத் தொண்டரும், உயர் பதவிக்கு வரலாம் என்ற நம்பிக்கையை இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன.எங்கள் கட்சியின் மாவட்டச் செயலரை மாற்றுவது போல், தி.மு.க.,வில் மாற்ற முடியுமா? அப்படி மாற்றினால் அவர்களது கட்சி கலகலத்துப் போய்விடும். ஆனால், எங்களது இயக்கத்தை அம்மா தன் கண்ணசைவில் வைத்திருக்கிறார். இயக்கத்தின் தொடர் வெற்றிகளுக்கு அதுவே காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.,வில் இருக்கும் தீவிர ஜெயலலிதா விசுவாசி ஒருவர் கூறியதாவது:தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆனால், குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்காமல், ஏனோ தானோ என நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்சியில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் மீது மட்டுமே இவ்வாறு நடவடிக்கை பாய்கிறது. இது கட்சிக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Comments