பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை-நவ. 18க்கு ஒத்திவைப்பு

ரேபரேலி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ரேபரேலியில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என பிரதிவாதியின் வழக்கறிஞர் ஹரி தத் சர்மா கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதி விஷ்மு பிரசாத் அகர்வால், நவம்பர் 18ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார் என்றார்.

முன்னதாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு வாக்கு மூலம் அளித்த முக்கிய சாட்சியான மூத்த போலீஸ் அதிகாரி அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

Comments