டெல்லி: 6 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஜிடிபி மிக மோசமாக சரிந்துள்ளதன் மூலம் மத்திய பாஜக அரசு மோசமான சாதனையை செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது.
இந்த நிலையில் மத்திய அரசை ஜிடிபி சரிவு காரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாக படுகுழிக்கு தள்ளிவிட்டது. இந்தியா மிக மோசமான இருண்ட காலத்துக்கு சென்றுவிட்டது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பக்கம் செய்துள்ள டிவிட்டில், 2வது காலாண்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் பாஜக தினமும் மிக மோசமான சாதனையை செய்து வருகிறது.
ஏற்கனவே அறநெறி, ஆட்சி மற்றும் புள்ளிவிவரங்கள் என்று அனைத்திலும் பாஜக மிக மோசமான சரிவை சந்தித்துவிட்டது. தற்போது ஜிடிபியும் சரிந்துள்ளது, என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
Comments