சென்னை: ஒரே கல்லில் நிறைய மாங்காய்களை அடிக்க எடப்பாடியார் செய்த பிளான் சுக்குநூறாகி விட்டது. இப்போது ஒரு மாங்காய்கூட கிடைக்காமல் போய்விட்டது. தேர்தல் நின்றுபோகவும், கலங்கி போய் நின்ற ஏசிஎஸ்-க்கு திரும்பவும் வாய்ப்பு கொடுத்து கை கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சும்மா ஒன்றும் இவர் ஏசிஎஸ்-க்கு உதவி விடவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருந்தன.
அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் கையே ஓங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் அதிமுக என்றால் அது ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் தான். இது எடப்பாடி தரப்புக்கு மிகவும் உறுத்தலாக உள்ள விஷயம்.
திட்டம் எனவே இதை உடைக்க கிடைத்த வாய்ப்புதான் வேலூர் தேர்தல். வேலூர் தேர்தலில் ஏசி சண்முகம் வெல்வதன் மூலம் அதை தனக்கு சாதகமாக்கும் வாய்ப்பு என்று எடப்பாடியார் நினைத்தார். ஏசி சண்முகம் ஒரு வேளை வென்றால், அது ஓபிஎஸ் தரப்பின் ஏகோபித்த நிலைக்கு முடிவு கட்ட உதவும் என்பதே இவரது திட்டமாக இருந்தது.
ஓபிஎஸ் ஏசிஎஸ்ஸுக்கு கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதிமுக ஒரு இணை அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுக்கவும் எடப்பாடி முயற்சிக்கலாம் என்றும், இதன் மூலம் ரவீந்திரநாத் குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த முயலலாம் என்றும் அரசியல் வல்லுநர்கள் பரபரப்பாக பேசினார்கள்.
துருப்பு சீட்டு அதாவது, ஏசிஎஸ் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகிறார் என்பதால் அவரும் அதிமுக உறுப்பினராகவே லோக்சபாவில் கருதப்படுவார். எனவே ஓபிஎஸ்ஸுக்கு இணையாக தனது தரப்பு துருப்புச் சீட்டாக ஏசிஸ்ஸை தரப்பு பயன்படுத்த முயற்சிக்கலாம் என்றே கிசுகிசுக்கப்பட்டது.
கனவு இது தன் ஆட்சியை பலப்படுத்தி கொள்வதுடன், மத்தியில் தனக்கு நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையையும் எடப்பாடிக்கு ஏற்படுத்தி தந்துவிடும். அது மட்டுமில்லை.. இந்த தேர்தலில் ஏசி சண்முகம் வெற்றி பெற்றால் பாஜகவுக்கு எதிராக மக்கள் எடுத்த முடிவினால் கிடைத்த வெற்றி என்பதை நிரூபிக்கலாம் என்றும் பிளான் போடப்பட்டது. ஆனால் போட்ட பிளான் எல்லாமே இப்போது பொசுங்கி விட்டது. இதனால் தகர்க்கப்பட்டது ஏசிஎஸ்-ன் கனவு மட்டுமில்லை.. எடப்பாடியாரின் கனவும்தான்!
Comments