சென்னை: சர்கார் படத்தை ரிலீஸ் நாளிலேயே வெளியிட்டது போல ரஜினிகாந்த் நடித்த 2ஓ படத்தையும் ரிலீஸ் செய்வோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகினருக்கு மிகப் பெரிய சவாலாக தமிழ் ராக்கர்ஸ் திகழ்கிறது. எந்தப் படம் வந்தாலும் சரி சில மணி நேரங்களில் அதன் புத்தம் புது பிரிண்ட்டை நெட்டில் வெளியிட்டு விடுகின்றனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் பலமுறை சவால் விட்டு விட்டார். ஆனாலும் தமிழ் ராக்கர்ஸ் அடங்குவதாக இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் சர்கார் படத்தின் பிரிண்ட்டை நெட்டில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். சொல்லி வைத்து அதை வெளியிட்டனர்.
#2Point0 Coming Soon in Tamil Rockers.#2point0November #Rajinikanth #Rajini #SuperStar #TamilRockers #TR— Tamil Rockers (@TamilRockersMV) November 9, 2018
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள பிரமாண்டப் படமான 2 ஓ படத்தையும் ரிலீஸ் நாளிலேயே வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் டிவீட் போட்டுள்ளது. இதனால் தமிழ்த் திரையுலகில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இப்படியே போய்ட்டிருந்தா எப்படிப்பா.. இதுக்கு முடிவே இல்லையா... ஏதாச்சும் பண்ணுங்க!
Comments