காஞ்சிபுரம்:காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை முக்தியடைந்தார்.
அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள், பக்தர்கள், தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, இன்று காலை இறுதிச்சடங்குகள் துவங்கின.
'மகா பெரியவர்' என அழைக்கப் படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், 'பிருந்தாவனம்' அருகிலேயே, அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Comments