சென்னை: நடிகை ஸ்ரீதேவி குடும்பத்திற்கு ஆறுதல் கூற மும்பை சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: சென்னை ஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். கவுதமி சம்பள பாக்கி பிரச்னை குறித்து நிறுவனம் மற்றும் ஊழியர்கள் பார்த்து கொள்வார்கள். வெளிமாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments