திண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் புகழேந்தி. தினகரன் அணியின் கர்நாடக மாநில செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் நண்பர் ஒருவரின் மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்தபோது அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் மேம்பால தடுப்புசுவற்றின் மீது அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் புகழேந்தி படுகாயமடைந்தார். புகழேந்தியின் இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments