செங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட தஷ்வந்த் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிடிவாரன்ட்
தாயை கொன்ற வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ஆஜராகாத காரணத்தினால் தஷ்வந்திற்கு செங்கல்பட்டு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து புழல் சிறையிலிருந்து அவரை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர்.
ஆத்திரம்
கோர்ட் வளாகத்தில் குவிந்திருந்த பெண்கள், தஷ்வந்த்தை சரமாரியாக தாக்கினர். தாயை கொன்றதுடன் தந்தையையும் கொல்ல திட்டமிட்டிருந்ததாக போலீசிடம் தஷ்வந்த் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள், அவரை காலணியால் கடுமையாக தாக்கினர். இதனையடுத்து போலீசார் தஷ்வந்தை மீட்டு கோர்ட்டிற்குள் அழைத்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Comments