ஜெ. மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா எடுத்த வீடியோ விசாரணை ஆணையத்திடம் வழங்கப்படும்: டிடிவி தினகரன்
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலாவால் வீடியோ எடுக்கப்பட்டது என்றும், அது விசாரணை ஆணையத்திடம் வழங்கப்படும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் மாநில அரசு, அது பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனை அமைத்துள்ளது.
ஐடி அதிகாரிகள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தி வரும் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது, சசிகலா எடுத்த வீடியோ விசாரணை ஆணையத்தில் தரப்படும். ஆனால், அதை வெளியிட கூடாது என்ற நிபந்தனையோடு வழங்குவேன் என்றார்.

Comments