கடலூர்: தமிழக அரசியலில் அதிமுக இணைப்பது மூலம் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார் என, கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
அதிமுக அணிகள் இணையும் முன்பே பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு நடந்தது. துணை முதல்வராக ஓ.பி.எஸ்., பொறுப்பேற்றதும் கவர்னர் அவருக்கு பூங்கொத்து கொடுக்கிறார்; சால்வை அணிவிக்கிறார். எடப்பாடி, ஓ.பி.எஸ்., கரங்களை பிடித்து சேர்த்து வைக்கிறார். இதில் இருந்தே பா.ஜ., தமிழக அரசை ஆட்டுவிக்கிறது என்பது உறுதியாகி விட்டது. மத்தியில் இருக்கும் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. நாங்கள் ஆட்சியை கவிழ்க்க போவதில்லை. அவர்களாகவே கவிழ்ந்து விடுவார்கள். மீண்டும் கருணாநிதி தலைமையில் ஒரு நல்லாட்சி மலரும் . இவ்வாறு அவர் பேசினார்.
Comments