
எல்லைப்பகுதியில் விமானதளங்களை தயார் நிலையில் வைக்கும்படி பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சியாசின் பகுதியில் பாக்., போர் விமானங்கள் சுற்றி வர அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்திய எல்லையை நோக்கி ஆயுதங்களையும், படைகளையும் பாக்., ராணுவம் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பாக்., வீரர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. போர் விமானங்கள், டாங்குகளை பாக்., ராணுவம் தயார் செய்வது போன்ற வீடியோவையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. ஜம்முவின் ஷம்ஷாபாரி பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியின் உடல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த உடலுக்கு அருகே பயங்கர ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் தாக்குதலை நடத்த பாக்., தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
Comments