
சென்னை: தினகரன், மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சின்னத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் அதிமுக(புரட்சிதலைவி அம்மா) அணியின் மதுசூதனுக்கும்,அதிமுக பெயரை பயன்படுத்திய புகாரில் அதிமுக(அம்மா) அணியின் தினகரனுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் நாளை (ஏப்-8) மாலை 4 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தினகரன் ஏற்கனவே அளித்த விளக்கம் திருப்தி இல்லாததால் மீண்டும் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
Comments