சவப்பெட்டியில் ஜெ. உருவ பொம்மை.. ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ் டீம் அநாகரீக பிரசாரம்

RK Nagar bypoll: Panneerselvam uses 'mock coffin' to seek votes சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் என்பது பல வகைகளிலும் கீழ் மட்டத்திற்கு இறங்கிவிட்டது. டிடிவி தினகரன் தரப்பு பணத்தை அள்ளி வீசுவதாக புகார்கள் வரும் நிலையில், ஓ.பி.எஸ் தரப்போ இன்னொரு வகையில் கீழே போய்விட்டது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தையே அடிப்படையாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறது ஓ.பி.எஸ் அணி. அதன் ஒரு கட்டமாக, ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப்பட்டிருந்ததோ அதேபோல சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை பிரசார ஜீப்பின் முன்னால் வைத்துக்கொண்டு தெரு, தெருவாக போய் வாக்கு கேட்கிறது ஓ.பி.எஸ் அணி.

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நடத்திய பிரசார ஊர்வலத்தில்தான் இந்த ஷாக்கிங் சம்பவம் நடந்துள்ளது. சென்டிமென்டாக ஆர்.கே.நகர் மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்பதற்காக இவ்வளவு கீழ் மட்டத்திற்கு அரசியல் நாகரீகத்தை ஓ.பி.எஸ் அணி கொண்டு சென்றுள்ளது நடுநிலையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Comments