
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை முதல்வர் சந்திக்க மறுப்பது வேதனை. கட்சி சின்னத்திற்கு ரூ.60 கோடி பேரம் என்றவுடன் அனைவரும் கூடிபேசுகின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்கட்சி பிரச்னையில் உறைந்து போயுள்ளனர். அரசியல் சட்டப்படி மாநில அரசு நிர்வாகம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. யார் பக்கம் நிற்பது என்ற குழப்பத்தில் அமைச்சர்கள் உள்ளனர். தமிழக நலன்கள் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. அதிமுக அரசு நிர்வாகம் செயலிழந்துவிட்டது. அரசு நிர்வாகத்தை செயல்பட வைக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments