சென்னை: பெங்களூரு சிறையில் இருக்கும் சசியை சந்திக்காமல் தினகரன் இன்று (18 ம் தேதி ) சென்னை திரும்பினார். நேற்று அங்கு சென்ற அவர் உரிய நேரத்தில் சந்திக்க முடியாமல் போனது. சிறை விதிப்படி திங்கள், புதன், வெள்ளி கிழமையில் மட்டுமே சந்திக்க முடியும் என்பதால் தினகரன் சசியை சந்திக்காமல் சென்னை திரும்பினார். தற்போது இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தினகரன் வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சந்திரம் ஆகியோர், தினகரனை சந்தித்தனர்.
Comments