தினமலர் செய்தி : சென்னை: தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை சந்திக்க, ஓ.பி.எஸ்., நாளை டில்லி செல்கிறார். தனது ஆதரவு எம்.பி.,க்களுடன் டில்லி செல்லும் ஓ.பி.எஸ்., நண்பகல் 12 மணியளவில் நஜீம் ஜைதியை சந்திக்க உள்ளார்.
சசிகலா அதிமுக பொது செயலராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஓ.பி.எஸ்., அணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சசிகலா அளித்த விளக்கத்திற்கு, இன்று ஓ.பி.எஸ்., தரப்பினர் விளக்கமாக பதிலளித்துள்ளனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ்.,கூறியுள்ள நிலையில், டில்லி பயணம் மேற்கொள்கிறார்.
Comments