ஊழல் குற்றவாளியின் படத்தை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துவது அவமானம் - ஸ்டாலின்

Shameful to hold convict's photo, charges Stalin
OneIndia News : சென்னை: அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவியேற்ற பின் ஜெயலலிதாவின் படத்தை மேஜை மீது வைத்துக்கொண்டு கையெழுத்து போட்டுள்ளார் என்றார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தன் பெரும்பான்மையை நிரூபித்த பொழுது ஏற்பட்ட பிரச்னை குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார். ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி, அவரது படத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவது அவமானம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments