OneIndia News : சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து இதுவரை அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தின் பிரபலமானது அப்பல்லோ மருத்துவமனை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து இதுவரை முறையான அறிக்கை எதுவும் அளிக்கப்பட வில்லை. இதனிடையே அவர் மறைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், மரணத்திலும் மர்மம் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு முன்பாகவே அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினமே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.
Comments