OneIndia News : விருதுநகர்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. எதிர்கோட்டை சுப்பிரமணியன் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறி சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு நிலவி வந்த நிலையில் சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்த எம்எல்ஏக்களை கழுவி கழுவி மக்கள் ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.
டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. எதிர்கோட்டை சுப்பிரமணியன் குறித்து அவதூறான கருத்துக்களைப் சமூக வலைதளங்களிவ் பதிவு செய்துள்ளதாக கூறி சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி அளித்துள்ள புகாரில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், நல்லமநாயக்கன்பட்டி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த வினோசுரா, மணிகண்டன், சதீஷ்குமார், கண்ணன், சந்தனகுரு, வைரமுத்து ஆகிய 6 பேரும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எம்.எல்.ஏ., சுப்பிரமணியனுக்கும், அரசாங்கத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக புகாரில் குறிப்பிட்டிருக்கிறார் சண்முகக்கனி. மேலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Comments