OneIndia News : சென்னை: தமிழக முதல்வரின் வெள்ளசேத நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரில் மழைவெள்ளம் புகுந்து மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திரையுலகினர், முதல்வரின் வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த் ரூ.10 லட்சமும், சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சமும், விஷால் ரூ.10 லட்சமும், விக்ரம் பிரபு ரூ.5 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.5 லட்சமும் வழங்கியுள்ளனர். தனுஷ் ரூ.5 லட்சமும், சத்யராஜ், சிபிராஜ் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும் வழங்கியுள்ளனர். தெலுங்கு நடிகர்கள் தற்போது தெலுங்கு நடிகர்களும், முதல்வரின் வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கியுள்ளார்கள். தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சமும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.10 லட்சமும், நடிகர் மகேஷ்பாபு ரூ. 10 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளனர். டுவிட்டரில் அறிவிப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் தங்களின் துயரங்களில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று கூறியுள்ள அல்லு அர்ஜூனா, ரூ. 25 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். லட்சக்கணக்கில் நிதி வருண்தேஜா ரூ. 3 லட்சமும், சம்பூர்னேஷ் பாபு என்பவர் ரூ. 50000 நிதி அளித்துள்ளார். சாய் தருண் தேஜ் என்பவர் 3 லட்சம் பெருமானமுள்ள நிவாரண பொருட்களை அளித்துள்ளார்.
Comments