OneIndia News : சென்னை: சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் பிற்பகல் முதல் இரவு வரை, நான்கு மணி நேரத்தில், 8.5 செ.மீ., மழை கொட்டியது. மழை நீர் வௌ்ளமென சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. அண்ணா சாலையில் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர்.
வடபழனி, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு ,நந்தனம், தியாகராயநகர், கிண்டி. சைதாப்பேட்டை, பாரிமுனை, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் புறநகர் பகுதிகளான, தாம்பரம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கி நின்றது. தொடர்ந்து பெய்த மழைக்கு தண்ணீர் செல்ல முடியாமல் பள்ளமான பகுதிகளில் தேங்கி நின்றது. இதையடுத்து இந்த மழைநீர் கருணாநிதியின் வீட்டின் உள்ளே புகுந்தது.
Comments