கொள்ளிடத்தில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீ ர் வீணடிப்பு

தினமலர் செய்தி : திருச்சி மாவட்டம், முக்கொம்பில் துவங்கி, தஞ்சாவூர், நாகை மாவட்டங்கள் வழியாக, கடலூர் மாவட்டத்தில், வங்கக்கடலில் கலப்பது கொள்ளிடம் ஆறு. இது, காவிரியின் வெள்ள வடிகாலாக பயன் படுத்தப்படுகிறது. 

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை, கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பி வீணடிப்பதை, பொதுப்பணித் துறையினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த ஆற்றின் குறுக்கே கதவணை கட்டினால், ஆண்டுதோறும், ஏராளமான டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க முடியும். இது தொடர்பாக, விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ஏற்று, 100 கோடி ரூபாய் செலவில், கதவணை கட்டும் திட்டத்தை, ஓராண்டுக்கு முன் அரசு அறிவித்தது. 

இருப்பினும், இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு இன்னும் முடியவில்லை. அதனால், இந்த ஆண்டும் கொள்ளிடம் வழியாக, கடலுக்கு சென்று தண்ணீர் வீணாவது தொடர்கிறது. மூன்று நாட்களாக, கொள்ளிடத்தில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலக்கிறது.

Comments