2 கோடி!

தினமலர் செய்தி : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறிய வழக்கில், அபராத தொகை, வருமான வரி தொகை, வழக்கு செலவு தொகை என, இரண்டு கோடி ரூபாயை முழுமையாக செலுத்தி விட்டதாக, சென்னை, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர், பங்குதாரர்களாக இருந்த, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், 1991 - 92, 92 - 93ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதா, சசிகலா, தனிப்பட்ட முறையில், 1993 - 94ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை.இவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியதற்காக, 1996ல், சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், வருமான வரித்துறை வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு, 18 ஆண்டுகளாக, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


உச்ச நீதிமன்றம் உத்தரவு: இந்த வழக்கு விசாரணையை, நான்கு மாதத்திற்குள் முடிக்கும்படி, கடந்த ஜனவரியில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து, எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தட்சிணாமூர்த்தி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் பதில் பெற வேண்டி உள்ளதால், இருவரும் தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.அப்படியே, வழக்கு விசாரணை அவ்வப்போது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இருவரும், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தங்கள் தரப்பில் சமரச மனுவை தாக்கல் செய்துள்ளதால், அதுவரை விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரினர்.இதையடுத்து, நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் இருவரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, உயர் நீதிமன்றம், சமரச மனு மீது, ஆறு வாரங்களில், வருமான வரி துறை முடிவெடுக்க வேண்டும் என, உத்தரவிட்டது. இருவர் ஆஜராகவும் விலக்கு அளித்தது.

இதற்கிடையில், டில்லியில் உள்ள, வருமான வரித் துறை அலுவலகத்தில், ஜெயலலிதா, சசிகலா, சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின், சமரச மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அபராத தொகை செலுத்தி விடுவதாக தெரிவித்து இருந்தனர்.
லவு தொகை என, இரண்டு கோடி ரூபாயை முழுமையாக செலுத்தி விட்டதாக, சென்னை, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

*வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக, தனிப்பட்ட முறையில், ஜெயலலிதா, 30,83,877 ரூபாய்; சசிகலா, 20,07,927 ரூபாய் செலுத்த வேண்டும்.
*சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், 91 - 92ம் ஆண்டுக்கு, 75,33,330 ரூபாய்; 92 - 93ம் ஆண்டுக்கு, 65,67,872 ரூபாய் என, மொத்தத்தில், ஒரு கோடியே, 99 லட்சத்து, 93 ஆயிரத்து, 872 ரூபாய் செலுத்த வேண்டும் என, வருமான வரி துறை உத்தரவிட்டுஇருப்பதாக தகவல் வெளியானது.
வழக்கறிஞர் கட்டணம்:இந்த தொகையில், வருமான வரி தொகை, அபராதம், வழக்கு செலவு தொகை,வருமான வரி வழக்கறிஞருக்கான கட்டணம் ஆகியவையும் அடங்கும் என, கூறப்படுகிறது.உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஜெ., தரப்பில், நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:வருமான வரித் துறையினரிடம், நாங்கள் தாக்கல் செய்த, சமரச மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் தெரிவித்து இருந்த தொகையையும் செலுத்தி விட்டோம். ஆனால், இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை. வழக்கு விசாரணையை, இரண்டு வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.விசாரணையை, வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைத்து, நீதிபதி கயல்விழி உத்தரவிட்டார்.

Comments