தினமலர் செய்தி : புதுடில்லி: கடந்த 2001 ல் பார்லி., மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய
13 வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த
சம்பவத்தின்போது உயிர்நீத்த ராணுவ வீரர்கள் 9 பேர் தியாகத்தை நினைவுகூறும்
வகையில் துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ,
துணை சபாநாயகர் தம்பித்துரை , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட
தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அத்வானி வருத்தம் : இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறுகையில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது , பாகிஸ்தான் , பயங்கரவாத ஆதரவு செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ள வில்லை. இது எனக்கு வருத்தமளிக்கிறது என்றார்.
நெஞ்சில் நிலைத்திருக்கும் : நமது ஜனநாயகத்தின் கோயிலான பார்லி.,யை காத்து உயிர்நீத்த தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன். அவர்கள் நினைவு என்றும் மறையாமல் நெஞ்சில் நிலைத்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Comments