ஜெ.,சாதாரண கைதியாக தான் இருக்கிறார்:டி.ஐ.ஜி.,

பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசின்ஹா இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : ஜெயலலிதா இங்கு சாதாரண கைதியாகவே இருக்கிறார். சிறையில் வழங்கப்படும் உணவை தான் சாப்பிடுகிறார். இந்த சிறையில் விஐபி அறையோ, ஏசி அறையோ கிடையாது. அதனால் ஜெயலலிதாவும் சாதாரண சிறை அறையிலேயே இருக்கிறார். சிறைத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவரது ஆடைகளை தான் அவர் உடுத்துகிறார்.
சிறையில் வெள்ளை ஆடை தான் உடுத்த வேண்டும் என்ற சட்டம் கிடையாது. ஜெயலலிதாவிற்கு நாள்தோறும் 3 முறை மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. டாக்டர்கள் அறிவுரைப்படியே அவருக்கு உணவு வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவிற்காக சிறப்பு நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். யாரையும் பார்க்க வேண்டும் என அவர் எங்களிடம் கேட்கவில்லை. நாங்களும் அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments