
பெங்களூரு :தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமின் கிடைக்காததால்,
அ.தி.மு.க.,வினர் தரையில் உருண்டு, புரண்டு அழுதனர்.பரப்பன அக்ரஹாரா
மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,
ஜாமினில் வெளியாவார் என்று அ.தி.மு.க., தொண்டர்கள் சிறை வளாகத்தில்
குவிந்தனர்.
ஆனால், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனு, விசாரணை
அக்., 7 க்கு தள்ளிவைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் தொண்டர்கள்
அதிர்ச்சியடைந்தனர். இதனால், பல பெண்கள் மார்பிலும், வயிற்றிலும் மாறி,
மாறி அடித்து கொண்டு கதறி அழுதனர்.மூதாட்டி ஒருவர் இரு கைகளையும் மேலே
தூக்கி சிறை இருந்த திசையை நோக்கி வணங்கி, கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
நேரம், செல்ல செல்ல தொண்டர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பினர். இதனால் சிறை
வளாகத்தின் முன் வெறிச்சோடி காணப்பட்டது.தமிழக முதல்வர் பன்னீர் செல்வம்
நேற்று காலையில் வருவதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்திருந்தனர். ஆனால்,
ஜாமின் விசாரணை எதிர்பார்த்தபடி அமையாததால் அவரது வருகை
தள்ளிப்போடப்பட்டது.
Comments