ஜெய்ப்பூர் :ராஜஸ்தானில், மாட்டு வண்டி ஓட்டுபவருக்கும் டிரைவிங் லைசென்ஸ்
அளிக்க, மாநில அரசு முடிவு செய்து உள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா
ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில அரசு
வெளியிட்டுள்ள, சாலை போக்குவரத்து துறையின் வரைவு மசோதாவில்
கூறப்பட்டுள்ளதாவது:
மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி ஓட்டுபவர்களுக்கு,
அந்தந்த மாவட்ட போக்குவரத்து துறை அலுவலகத்தில், நேர்முகத் தேர்வும்,
செயல்முறை தேர்வும் நடத்தப்படும்.நேர்முகத் தேர்வில், போக்குவரத்து
விதிகள், சிக்னல் மற்றும் விளக்குகள் குறித்த கேள்விகள் கேட்கப்படும்.
செயல்முறை தேர்வில், வண்டிக்காரர் பிறப்பிக்கும் உத்தரவுகளில், எத்தனை
உத்தரவுகளுக்கு, மாடு அல்லது குதிரை கட்டுப்படுகிறது என்பது
கண்காணிக்கப்படும். இந்த இரண்டு தேர்வுகளிலும் தேறியவர்களுக்கு மட்டுமே,
'டிரைவிங் லைசென்ஸ்' வழங்கப்படும்.இவ்வாறு, வரைவு மசோதாவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments