ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,ஆர்னியா
பகுதியில் அத்துமீறி நுழைந்து எல்லைப்பாதுகாப்பு படையினர் முகாம் மீது
துப்பாக்கி சூடு நடத்தினர். 15 முகாம்களில் இத்தாக்குதல்
நடந்தது.இந்நிலையில் இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த
பயங்கர துப்பாக்கி சூடு சண்டையில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
35க்கும் மேல்
காயமடைந்துள்ளனர்.மேலும் மக்கள் வசிக்கும் பகுதிக்கும் செல்ல முயன்று
வருகிறது பாகிஸ்தான் ராணுவம்.கடந்த 6 நாட்களில் பாகிஸ்தான் படைகள்
அத்துமீறி நடத்திய 10வது தாக்குதல் ஆகும்.கடும் துப்பாக்கி சூடு நள்ளிரவு
தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த மாதம் அத்துமீறல்கள்:
எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதியில் இந்திய ராணுவத்தினர் மீது, தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுத்தது.சில நாட்களுக்கு முன், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய ராணுவ வீரர்கள் மீது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில், ஐந்து இந்திய வீரரர்கள், வீர மரணம் அடைந்தனர்.
கடந்த மாதம் 23ம் தேதியில் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள 22 இந்திய ராணுவ முகாம்களில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் ஜவான் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.இதில் இருவர் பலியானார்கள்.தற்போதும் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
Comments