
போலீஸ் தகவலின்படி,மேற்கு டில்லியில் உள்ள ஜானகிபுரிக்கு வெளியே 15 கி.மீ., தொலைவிலர் சாலையை கடக்க முயன்ற போது பார்த்ததாகவும் அப்போது அவள் மொட்டை போட்டிருந்தததாகவும் ,கழுத்தில் அடையாள அட்டை காணப்பட்ட நிலையில்,அவளது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் மேற்கு டில்லியில் உள்ள மாயாபுரியில் போலீஸ் ஸ்டேஷனில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரிக்கப்பட்டு அவளது பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் தியாகி கூறுகையில், காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க,மக்களிடம் தெரிய குழந்தையின் புகைப்படம் உள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் தெரியபடுத்தினோம்.இதனால் அவளது பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இப்புகார் தொடர்பாக வழக்கு ஜந்தர் மந்தருக்கு மாற்றப்பட்டது. எப்படியோ அக்குழந்தை அவளது பெற்றோர் வசம் ஒப்படைக்கபட்டுவிட்டது. இருந்தாலும் குழந்தை கடத்தப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் தியாகி.
Comments