
இதனால் அந்த படத்தில் எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கருதுகிறேன் என்று ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த படத்துக்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அப்படத்தின் டைரக்டரான பைசல் சாயிப் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், மே ஹூம் ரஜினிகாந்த் படத்தில் ரஜினியின் பெயர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி அவரைப் பற்றிய எந்தவொரு காட்சிகளும் இடம்பெறவில்லை. அதோடு, இந்த படத்தில் ரஜினியை இழுவுபடுத்தும் எந்தவொரு காட்சியும் இல்லை. மாறாக, ரஜினிகாந்துக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் படமாகவே இருக்கும். அதோடு, ரஜினியின் ரசிகர்கள் விரும்பும் வகையிலான காமெடி களத்தில் கதை பண்ணியிருக்கிறேன் ஆனால், படத்தை பார்க்காமலேயே அவர்கள் இப்படி நீதிமன்றத்தை நாடியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது என்று கூறியுள்ள பைசல் சாயிப், இதுகுறித்து ரஜினிகாந்திடமோ அல்லது அவரை சார்ந்தவர்களிடமோ விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments